தமிழ்நாடு

சென்னை வந்தடைந்தார் பிரதமர்

14th Feb 2021 10:49 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார்.

தனி விமானம் மூலம் தில்லியிலிருந்து காலை7.50 மணிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி 10.30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்திற்கு செல்கிறார். அடையாறு ஐ.என்.எஸ்.-ல் இருந்து விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு அவர் செல்கிறார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், ரூ.4,486 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களை அவா் தொடக்கி வைக்கிறாா்’ மேலும் ரூ.3, 640 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டுகிறாா்.

ADVERTISEMENT

Tags : Narendra Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT