தமிழ்நாடு

பாரத தேசத்தின் பாதுகாவலர் பிரதமர்: ஓ.பன்னீர் செல்வம்

14th Feb 2021 12:10 PM

ADVERTISEMENT


பாரத தேசத்தின் பாதுகாவலர் பிரதமர் நரேந்திர மோடி என்று நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது, அதிமுக அரசின் நடவடிக்கைக்கு பிரதமர் ஆதரவு அளித்து வருகிறார். 

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒத்துக்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்திற்கு இரண்டு முக்கிய ரயில்  திட்டங்களைக் கொடுத்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி கூற வேண்டும். 

ADVERTISEMENT

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்துவது மெட்ரோ ரயில் திட்டம் தான்.

பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினராக இருந்தாலும் நல்லதை பாராட்ட தவறாதவர் பிரதமர் நரேந்திர மோடி என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT