தமிழ்நாடு

உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

6th Feb 2021 03:44 PM

ADVERTISEMENT

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பா. நீதிபதி தலைமையில் பள்ளி துணை ஆய்வாளர் ஒ. செல்வம் முன்னிலையில்   பதினொன்றாம்  வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

இதில் 6 பள்ளிகளைச் சேர்ந்த  612 நபர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அ.பூச்சிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்  609 விலையில்லா மிதிவண்டி வழங்கினர். மேலும் சேடப்பட்டி  அரசு மேல்நிலைப் பள்ளியில்  1,120 விலையில்லா மிதிவண்டி வழங்கினர்.

இதில், ஆவின் நிர்வாக குழு உறுப்பினர் துரை தனராஜன், சுப்பிரமணி, மாவட்ட கவுன்சிலர்  சுதாகரன், செல்லம்பட்டி அம்மா பேரவை செயலாளர் கவுன்சிலர் பெருமாள், செல்லம்பட்டி அவைத்தலைவர் பண்பாளன், ஆவின் பொதுக்குழு உறுப்பினர்  சுப்பிரமணியன், பிச்சை மணி, மற்றும் கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சூசைமாணிக்கம், தாளாளர் ஆரோக்கியசாமி, பொருளாளர். சின்னப்பராஜ், அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் கள் சாம்ராஜ்,  ஜவகர்,  சிவராம பாண்டியன்,  தாமரைசெல்வி,  சிவராமபாண்டியன்,  உமா, சின்னபாண்டி, எஸ். எஸ். சரவணக்குமார், அங்கேயர்கணி, சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT