தமிழ்நாடு

தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

5th Dec 2021 05:14 AM

ADVERTISEMENT

சென்னை, தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

எஸ்பிசிஐடி அலுவலகத்துக்கு  வெள்ளிக்கிழமை வந்த தபாலில் சென்னை தலைமைச் செயலகத்தில் குண்டு வைத்திருப்பதாக எழுதி இருந்த தகவலின்பேரில், மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தினா்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணி வரை இந்தச் சோதனை நடைபெற்றது. இதில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT