தமிழ்நாடு

பள்ளி அருகே போதைப்பொருள் விற்பனை: கடும் தண்டனை தர புதிய சட்டத்திருத்தம்

31st Aug 2021 10:34 AM

ADVERTISEMENT

பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்றால் கடும் தண்டனை தர சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பென்னாகரம் பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, பள்ளி மற்றும் கல்லூரி அருகே போதைப்பொருள் விற்பனை குறித்து கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்,

பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்றால் கடும் தண்டனை தர புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும். தமிழகத்தில் குட்காபொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்.  

ADVERTISEMENT

மேலும், தடை செய்யப்பட்ட குட்காபொருளை விற்போர், கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT