தமிழ்நாடு

மானாமதுரை அருகே கார் மோதி பைக்கில் சென்றவர் சாவு

22nd Aug 2021 05:48 PM

ADVERTISEMENT


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி உயிரிழந்தார்.

மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிள்ளை மகன் சூசை மாணிக்கம்(67),  இவர் தனது இரு சக்கர வாகனத்தில் அருகேயுள்ள முத்தனேந்தல் சென்றார்.

இதையும் படிக்க | மணப்பாறை அருகே சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ: ஓட்டுநர் பலி

அப்போது மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த கார் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சூசை மாணிக்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT