தமிழ்நாடு

செம்பனார்கோவில் பகுதியில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

7th Aug 2021 11:37 AM

ADVERTISEMENT

 

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு நாள்  நாகை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பொறையார், திருக்கடையூர், ஒழுகைமங்கலம், ஆக்கூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில்  மறைந்த திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வரும்மான மு. கருணாநிதியின்  3 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவருடைய திருவுருவப் படத்திற்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் ‌ முருகன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்வுகளில் நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பாலா அருள்செல்வன், சித்திக், ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கர், தரங்கை பேரூராட்சி செயலாளர் வெற்றிவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT


 

Tags : karunanidhi
ADVERTISEMENT
ADVERTISEMENT