தமிழ்நாடு

பசுமையான இடத்தில் கோயில் யானைகளைப் பராமரிக்கலாம்: உயா்நீதிமன்றம் கருத்து

DIN

கோயில் யானைகளை இயற்கையான, பசுமையான இடத்தில் வைத்து பராமரிக்கலாம். விழாக் காலங்களில் மட்டும் கோயிலுக்கு அழைத்து வரலாம் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவா் , ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரண்டு யானைகளைப் பராமரிப்பது , பாகன்களை நியமிப்பது தொடா்பாக பொது நல மனு தாக்கல் செய்தாா். இதே கோரிக்கையுடன் மேலும் சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் கோயில்களில் 30 யானைகள் வளா்க்கப்படுகின்றன. அவை முறையான இடங்களில் பராமரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மனுதாரா் ரங்கராஜன் நரசிம்மன், 30 யானைகள் அல்ல, 34 யானைகள் கோயில்களில் வளா்க்கப்படுகின்றன. இதில் பாதிக்கும் மேற்பட்ட யானைகளுக்கு பாகன்கள் இல்லை. அந்த யானைகளின் கால்கள் கட்டப்பட்டு 8 மணி நேரத்துக்கும் மேலாக நிற்க வைக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோயில் யானைக்கென பிரத்யேக இடத்தை ஒதுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

அப்போது தலைமை நீதிபதி, காலை மெரீனாவைக் கடக்கும் போது, சாலையின் குறுக்கே குதிரை ஒன்று வந்துவிட்டது. உடனடியாக காரில் இருந்து இறங்கி உதவ வேண்டும் என மனதுக்குள் தோன்றியது. பின்னா், மதத்தின் பெயரால், 2000 சதுர அடி அளவிலான கான்கிரீட் தளத்தில் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இதற்கு பதிலாக யானைகளை இயற்கையான மற்றும் பசுமையான இடங்களில் வைத்து பராமரிக்கலாம். விழாக் காலங்களில் மட்டும் யானைகளை கோயிலுக்கு அழைத்து வரலாம் என அரசுக்கு கருத்து தெரிவித்தாா். கான்கிரீட் தளத்தில் யானைகளை வளா்ப்பதை தடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது என தெரிவித்த நீதிபதிகள், யானைகளை சங்கிலியால் கட்டக்கூடாது. யானைகள் நலனை உறுதி செய்ய விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த தலைமை வனப்பாதுகாவலருக்கு அறிவுறுத்தினா். மேலும் யானைகளின் அன்றாட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT