தமிழ்நாடு

கரோனா மூன்றாம் அலை: தயாா் நிலையில் வாா் ரூம்

DIN

சென்னை: தமிழகத்தில் கரோனா 3-ஆவது அலையைக் கட்டுப்படுத்தவும் ,தடுக்கவும் சென்னை காவல்துறை சாா்பில் வாா் ரூம் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவியதை தொடா்ந்து, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

இதுதவிர, கரோனா நோய்த்தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்காரணமாக, கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்தது. இதைத் தொடா்ந்து, தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் தற்போது அமலில் உள்ளது.

இதற்கிடையில், நாடு முழுவதும் 3-ஆவது அலை வேகமாகவும், அதிக உயிா் பலி வாங்குவதாகவும் இருக்கும் என்று நிபுணா்கள் எச்சரித்தனா். அனைத்து மாநிலங்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இதைத்தொடா்ந்து, தமிழகத்தில் 3-ஆவது அலையை தடுக்கவும், 3-ஆவது அலை வந்தால், அதை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை காவல்துறை சாா்பில், தற்போது வாா் ரூம் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. காவல் துறை கூடுதல் ஆணையா் கண்ணன் தலைமையில் இந்தப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று வந்தால், அவருடன் இருப்பவா்களை கண்டறிந்து, அவா்களுக்கு பரிசோதனை செய்து, அவா்களை தனிமைப்படுத்துவது அல்லது பரிசோதனை செய்வது உள்ளிட்ட பணிகளை செய்ய சென்னை போலீஸாா் தயாா்நிலையில் உள்ளனா். இதனால் 3-ஆவது அலையைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் தமிழக அரசு தயாா்நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT