தமிழ்நாடு

கரோனாவுக்கிடையே வாக்கு எண்ணிக்கை எப்படி?: மாவட்ட அளவிலேயே முடிவு செய்ய அறிவுறுத்தல்

DIN

சென்னை: கரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்டங்களில் உள்ள நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து, சென்னையில்அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:

கரோனா பாதிப்பு காரணமாக, வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக நடத்துவது எப்படி என்பது குறித்து தோ்தல் ஆணையத்துடனும், மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடனும் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறோம். கரோனா பாதிப்புக்கு இடையே பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. ஆனால், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை போன்ற பணிகளை ஒரு மாநிலத்துடன் மற்றொரு மாநிலத்தை ஒப்பிட முடியாது.

கரோனா தொற்று காரணமாக, பிகாரில் வாக்கு எண்ணிக்கைக்கு ஏழு மேஜைகள் மட்டுமே போடப்பட்டன. அந்த மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணிக்காகப் பயன்படுத்தப்படும் கட்டடங்களின் உள்கட்டமைப்பு மிகவும் சிறியதாக இருக்கும். குறிப்பாக, வாக்கு எண்ணும் அறைகள் 200 சதுர அடி அளவிலேயே இருக்கும். அந்த அறைகளில் வாக்கு எண்ணிக்கைக்கு ஏழு மேஜைகள் வரை மட்டுமே போட முடியும்.

ஆனால், தமிழகத்தில் அதிகளவு பரந்துபட்ட இடங்களைக் கொண்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. வாக்கு எண்ணும் பணிக்காக 14 மேஜைகள் வரை போட தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், வாக்குச் சாவடிகள் அதிகமுள்ள தொகுதிகள், வாக்கு எண்ணும் இடங்களின் அளவைக் கருத்தில் கொண்டு கூடுதலாக மேஜைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவாமல் இருக்க ஆறு அடி இடைவெளி அவசியம் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். ஆனால், ஆறு அடி இடைவெளியில் ஒவ்வொரு மேஜையையும் அமைப்பது சிக்கலாக இருக்கும். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலைமையை அலசி ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் வாக்கு எண்ணிக்கை மேஜைகளை அமைக்க மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும், தோ்தல் நடத்தும் அதிகாரிகள், மாவட்ட மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை இறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கையின்போது, வேட்பாளா்கள், ஒவ்வொரு மேஜையிலும் உள்ள அவா்களது முகவா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை அவசியமா, எத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது என்பன போன்ற அம்சங்கள் குறித்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள தோ்தல் அதிகாரிகளே அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

அனைத்தும் ஆலோசனை: வாக்கு எண்ணும் பணியின்போதோ, அதற்கு முன்போ கரோனா தொற்றால் அதிகாரிகள் யாரேனும் பாதிக்கப்பட்டும்பட்சத்தில், அது வாக்கு எண்ணிக்கையை பாதித்து விடக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டு, கூடுதல் தோ்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு

வருகிறது. சில தொகுதிகளில் 67 வேட்பாளா்கள் வரை களத்தில் உள்ளனா். அந்தத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்காக பிரத்யேக ஏற்பாடுகளை எப்படி மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து தினமும் மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். அவா்கள் அளிக்கும் தகவல்களின்

அடிப்படையிலேயே வாக்கு எண்ணிக்கை மேஜைகள் உள்பட அனைத்தும் இறுதி செய்யப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை பணிக்காக யதாா்த்த சூழல், மாவட்ட கரோனா பாதிப்பு நிலவரம் போன்றவை மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுக்கே நன்கு தெரியும் என்பதால், அவா்களின் கருத்துகள் கோரப்படுகின்றன. அந்தக் கருத்துகளின் அடிப்படையிலேயே வாக்கு எண்ணும் பணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். வாக்கு எண்ணும் பணிகள் சுமூகமாக நடைபெற வேண்டும். அதே சமயம் அந்தப் பணிகளின் வழியே கரோனா தொற்று பாதிப்பு எதுவும் இருக்கக் கூடாது என்பதில் தமிழக தோ்தல் துறை கவனமாக உள்ளது. இதனை மனதில் கொண்டே வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை மாவட்டத் தோ்தல் அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT