தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி உற்பத்தி: பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்த வலியுறுத்தல்

DIN

திருப்பூர்: கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணிகளில் பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும் என்று திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலக அளவில் கரோனா நோய்த் தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இத்தகைய சூழ்நிலையில் நம்முடைய ஒரே தற்காப்பு வழி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதாகும்.

ஆனால் தற்போது கரோனா நோய்த் தொற்று பரவி ஒரு ஆண்டுக்கு முடிவடைந்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி செலுத்த திணறி வருகிறோம்.

மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி தற்போதைய வேகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டால் 13 மாதங்களில் தன் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

நம் நாட்டில் தற்போது இரு தனியார் நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசிகளை அளித்து வருகிறது. ஆகவே, கரோனா தடுப்பூசி உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தாதது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

தமிழகத்தில் சென்னையில் உள்ள பிசிஜி வேக்சின் லேபரேட்டரி, குன்னூரில் உள்ள பாஸ்ட்டர் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக காசநோய், ரேபிஸ் மற்றும் பிசிஜி மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இந்த இரு பொதுத்துறை நிறுவனங்களும் ஆண்டுக்கு 20 கோடி தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆகவே, அரசு போர்க்கால அடிப்படையில் இரு நிறுவனங்களுக்கும் கோவேச்சின் தடுப்பூசி தயாரிக்க ரூ.200 கோடி நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியையும் வழங்க வேண்டும் என்றார்.

இந்த சந்திப்பின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் எஸ்.ரவிசந்திரன், மாவட்ட பொருளாளர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT