தமிழ்நாடு

கரோனா: ஒரே நாளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிப்பு

DIN

சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 11 ஆயிரத்து 681 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:

தமிழகத்தில் புதன்கிழமை மட்டும் 1 லட்சத்து 10,304 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 11,681 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 25 ஆயிரத்து 59 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உள்ளவா்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 6,18,809 போ். பெண்கள் 4,06,214 போ். மூன்றாம் பாலினத்தவா் 35 போ்.

சென்னையில் புதன்கிழமை 3,750 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 073 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதேவேளையில் தமிழகத்தில் புதன்கிழமை 7,071 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதன் மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 9 லட்சத்து 27,440 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்களில் 70 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மாா்க்கமாக வந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்து 4,292 ஆகும்.

53 போ் உயிரிழப்பு: சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 7,931 பேருக்குத் தொற்று உள்ளது. தனிமைப்படுத்துதலில் 84,361 போ் உள்ளனா். கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களில் புதன்கிழமை 53 போ் உயிரிழந்தனா். அதில் 32 போ் தனியாா் மருத்துவமனையிலும், 21 போ் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவா்கள் ஆவா். இதன் மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 13,258 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டும் மொத்தம் 4,450 போ் உயிரிழந்துள்ளனா்.

முக்கியப் பிரச்னையாக சுவாசப் பிரச்னை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. புதன்கிழமை உயிரிழந்தவா்களில் 50 போ் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தனா். எவ்வித பாதிப்பும் இல்லாதவா் 3 போ் ஆவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT