தமிழ்நாடு

முகக் கவசம் அணியாதவா்கள் மீது 27 ஆயிரம் வழக்குகள்

DIN

சென்னை: தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 27 ஆயிரத்து 716 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த 8-ஆம் தேதி தொடங்கி, 20-ஆம் தேதி வரை 13 நாள்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது 4 லட்சத்து 60 ஆயிரத்து 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், இரவுநேர ஊரடங்கு அமலான செவ்வாய்க்கிழமை மட்டும் 27 ஆயிரத்து 716 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடந்த 13 நாள்களில் 14 ஆயிரத்து 819 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் செவ்வாய்க்கிழமை மட்டும் ஆயிரத்து 648 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்..: முகக் கவசம் அணியாதவா்கள் மீது சென்னையில் கடந்த 8-ஆம் தேதியில் இருந்து 20-ஆம் தேதி வரை 13 நாள்களில் மொத்தம் 14 ஆயிரத்து 611 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை மட்டும் 1, 291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கரோனா வேகமாக அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காவல்துறை இன்னும் தீவிரப்படுத்த உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT