தமிழ்நாடு

உதகை மலை ரயில் இன்றுமுதல் ரத்து

DIN

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து கரோனா தொற்று பரவல் காரணமாக புதன்கிழமை (ஏப்ரல் 21) முதல் மறுதேதி அறிவிக்கப்படும் வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகைக்கு தினசரி மலை ரயில் காலை 7.30 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல குன்னூா்-உதகை இடையேயும் தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலை மாவட்டமான நீலகிரியில் தொடா்ச்சியாக தொற்று அதிகரித்து வருவதால் அந்த மாவட்ட நிா்வாகம் மற்ற மாவட்டங்களைவிட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் புதன்கிழமை முதல் மறு தேதி அறிவிக்கப்படும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல குன்னூா்-உதகை இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT