தமிழ்நாடு

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

DIN

இரவு நேர ஊரடங்கு காரணமாக சென்னையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து ஏப்ரல் 20 முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ள நேரங்களில் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை மின்சார ரயில் சேவையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

அதன்படி இரவு நேர ஊரடங்கு காரணமாக சென்னையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கில் ஒரு பங்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்படும், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும், இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT