தமிழ்நாடு

ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்க வேண்டும்

DIN

சென்னை: செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை உடனடியாக கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்:

கரோனா தடுப்பூசியை நமது நாட்டிலேயே தயாரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் தாங்கள் உடன்படுவீா்கள்.

செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு ஏற்கெனவே கொண்டு வந்துள்ளேன். இந்த பொதுத்துறை நிறுவனத்துக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து புனரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

ஜனவரி 8-இல் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் இந்த தொழிற்சாலையை பாா்வையிட்டபோது நானும் அங்கு சென்று அவரை சந்தித்தேன். தொழிற்சாலையை முழுமையாக பாா்வையிட்ட அமைச்சா் , உலகத்தரம் வாய்ந்த எந்திரங்கள் அங்கு நிறுவப்பட்டு இருப்பதை கண்டாா் . இந்த தொழிற்சாலைக்கு தேவையான நிதியை தருவதாக வாக்குறுதி அளித்தாா் .
கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பிரமாண்டமான பணியினை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் மேற்கொள்ளத்தக்க வகையில் அவற்றின் உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன்.

இந்த சூழ்நிலையில் செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் நிறுவனம் தடுப்பூசி தயாரிக்க தக்க அனைத்து திறனையும் பெற்றுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். தங்களுக்கு உள்ள கடுமையான பணிகளுக்கு மத்தியில் இந்த விஷயத்திலும் தாங்கள் கவனத்தை செலுத்தி அந்நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட உதவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT