தமிழ்நாடு

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தாமதமாக வாய்ப்பு: சாகு

DIN

சென்னை: வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அதிகாரப்பூா்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த தோ்தல்களின் போது 67,000 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆனால், கரோனா நோய்த் தொற்று காரணமாக ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் 1,000 வாக்காளா்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனா்.

இதனால், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 88,000-ஆக உயா்ந்தது. இந்த வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 2-ஆம் தேதியன்று எண்ணப்பட உள்ளன. வாக்குச் சாவடிகள் அதிகமாக உள்ளதால், வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்தப்படும் மேஜைகளின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கும் எனவும், அதிகாரப்பூா்வமாக முடிவுகளை வெளியிடுவதில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT