தமிழ்நாடு

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் பலி?

DIN

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். எனினும், அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என்றும், அவர்களுக்கு ஏற்கனவே உள்ள இருதய பாதிப்பு உள்ளிட்ட வேறு பிரச்னைகளாலேயே இறந்திருப்பதாக மருத்துவ வட்டாரம் விளக்கம் அளித்துள்ளது.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிறப்பு வார்டில் 170 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் இருவர் திங்கள்கிழமை மதியம் அடுத்தடுத்து உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

அதேசமயம், அந்த வார்டுக்கு செல்லக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர்களை மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, கரோனா நோயாளிகள் இறப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் எனக் கூறி அவர்களது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அதேவார்டில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிகளின் உறவினர்களுக்கும் தெரிய வந்ததால் அவர்களும் அங்கு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. எனினும், கரோனா நோயாளிகள் இருவரது இறப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னை இல்லை என்றும், அவர்களுக்கு ஏற்கனவே உள்ள இருதய பாதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாகவே அவர்கள் இறந்திருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மணிவண்ணன் தெரிவித்தார்.

இதேபோல், மருத்துவமனையின் முதல்வர் ஆர்.செல்வி கூறுகையில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் போதுமான அளவில் இருப்பு உள்ளது. கரோனா நோயாளிகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை எனக் கூறப்படுவது தவறான தகவல். அவர்கள் இருதய பாதிப்பு உள்ளிட்ட வேறு காரணங்களாலேயே உயிரிழந்துள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT