தமிழ்நாடு

நாமக்கல்: மேடை அமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு

DIN

நாமக்கல்: கரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமாகி உள்ளதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் திருமணங்களில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், குடமுழுக்கு மற்றும் திருவிழாக்களுக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அத்தொழிலை சார்ந்த உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை ஒலி, ஒளி, ஜெனரேட்டர், பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரம், மணவறை அலங்காரம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோர் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கோரிக்கை மனு அளிக்க ஊர்வலமாக வந்தனர். அந்த வகையில் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கா.மெகராஜிடம், மேற்கண்ட அனைத்து தொழில்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சங்கமான தமிழக ஹயர் கூட்ஸ்  ஓனர்ஸ் அசோஷியேஷன் நிர்வாகிகள் மனுவை வழங்கினர். 

இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.கே.செல்லப்பன் கூறியதாவது: 

மனு அளிக்க வந்த கோயில் விழா இசைக்கலைஞர்கள்.

எங்களுடைய தொழிலுக்கு திருவிழா காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிகப்படியான வேலை இருக்கும். பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து தொழில் நடத்தி வருகிறோம். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் எங்களுடைய தொழில் பாதிப்படையும் வகையில் சில விதிகள் உள்ளன. திருமண விழாக்களில் 100 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பானது சாத்தியமில்லை. 50 சதவீத அளவில் மக்களை அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதேபோல் நாதஸ்வர கலைஞர்கள், கரகாட்டக்காரர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோரரும் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கோயில் திருவிழா மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கக் கோரியும், கோயில்களை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வைக் கருத்தில் கொண்டும் நல்லதொரு முடிவு எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT