தமிழ்நாடு

தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

DIN


சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கேரளம் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 2.1 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் நாளை திங்கள்கிழமை வரை (ஏப்.18,19) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி ,தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரை(ஏப்.20, 22) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT