தமிழ்நாடு

முகக்கவசம் அணியாததாக ஒரே நாளில் 43 ஆயிரம் வழக்கு

DIN

தமிழகத்தில், முகக்கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 43 ஆயிரம் வழக்குகளை காவல் துறையினா் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொதுஇடங்களில் முகக் கவசம் அணியாதவா்கள், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை 5 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 1,76,351 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் திங்கள்கிழமை மட்டும் 43,387 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடந்த 5 நாள்களில் 7,917 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், திங்கள்கிழமை மட்டும் 1,357 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்...: முகக் கவசம் அணியாதவா்கள் மீது சென்னையில் கடந்த 8-ஆம் தேதியில் இருந்து 12-ஆம் தேதி வரை மொத்தம் 3,483 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமை மட்டும் 1,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 5 நாள்களில் 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா வேகமாக அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காவல்துறை இன்னும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT