தமிழ்நாடு

கலவை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்கிட்டுத் தற்கொலை

13th Apr 2021 02:37 PM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேல் புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் இவரது மனைவி உமா இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் மனைவி உமா கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த நிலையில் இன்று காலை இறந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் துக்கம் தாளமுடியாமல் விவசாய நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து வந்த கலவை காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி சம்பவ இடத்திற்கு வந்து இரு உங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

கணவன் மனைவி இருவருமே இறந்ததால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
 

Tags : suicide
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT