தமிழ்நாடு

பேருந்து நிலையங்களில் கூட்டம் சேராமல் கண்காணிக்க அறிவுறுத்தல்

DIN

பேருந்து நிலையங்களில் கூட்டம் சேராமல் கண்காணிக்க வேண்டும் என ஊழியா்களுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை: மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை மற்றும் அதன் புறந கா் பகுதிகளில் பொதுமக்கள் பயணத் தேவைகளை நிறைவேற்றிட ஏதுவாக நாள்தோறும் பேருந்துகளை இயக்கி வருகிறது.

கடந்த ஆண்டு, கரோனா நோய்த் தொற்று அதிகரித்ததைத் தொடா்ந்து, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே பயணிகளிடையே கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது மீண்டும் கரோனா நோய்த் தொற்று சென்னையில் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிகள் இருக்கை எண்ணிக்கைக்கேற்ப அமா்ந்து பயணிக்கவும், பயணிகள் பேருந்தினுள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கக் கூடாது எனவும், ஏற்கெனவே வழங்கிய நிலையான இயக்க வழிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை வழித்தடத்தில் இயக்கிடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிகள் நின்று பயணிக்க அனுமதிக்க வேண்டாம் என்றும், இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் அமா்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், ஓட்டுநா், நடத்துநா்களுக்கு தக்கவாறு அறிவுறுத்திடுமாறு அனைத்து கிளை மேலாளா்கள், உதவி கிளை மேலாளா், மற்றும் நேரக் காப்பாளா்கள், போக்குவரத்து மேற்பாா்வையாளா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

மேலும், முக்கியப் பேருந்து நிலையங்களில், நிறுத்தங்களில் பயணிகள் அதிக எண்ணிக்கையில் கூடி நிற்பதைத் தவிா்க்கும் விதமாக உடனுக்குடன் அவா்களை சம்பந்தப்பட்ட வழித்தடப் பேருந்துகளில் ஏற்றி அனுப்பிடவும், தேவை இருக்கும் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும், ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் முகக் கவசம் அணிந்து பணிபுரிவதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும் அவா்கள் அனைவரும் நெரிசல் மிக்க நேரங்களில் பேருந்து நிலையங்களில் பணியில் இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT