தமிழ்நாடு

தாம்பரம்-செங்கல்பட்டு 3-ஆவது பாதை: அடுத்த மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டம்

DIN

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மூன்றாவது பாதை அமைக்கும் பணி அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மாா்க்கத்தில் அதிக ரயில்களை இயக்க முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 29 கி.மீ. தொலைவுக்கு 3-ஆவது பாதை அமைக்க கடந்த 2016-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இதற்கான மொத்த திட்ட மதிப்பு ரூ.256 கோடியாகும். மொத்தமுள்ள 29 கி.மீ. தூரத்தை 3 கட்டங்களாகப் பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள்கோவில்-கூடுவாஞ்சேரி வரை 3-ஆவது பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்டமாக, கூடுவாஞ்சேரி-தாம்பரம் வரை பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு அதிக ரயில்களை இயக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:

கூடுவாஞ்சேரி-செங்கல்ட்டு இடையே 18 கி.மீ. தொலைவு பாதைப் பணி முடிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே 11 கி.மீ. தொலைவு பாதைப்பணி விரைவாக நடைபெறுகிறது. இந்தப்பாதையில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுதவிர, மின்கம்பங்கள், மேல்நிலை மின்பாதை அமைத்தல் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெருங்களத்தூா், வண்டலூா், ஊரப்பாக்கம் ஆகிய இடங்களில் நடைமேடை கட்டடப்பணி நடைபெறுகிறது. அடுத்த மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படவுள்ளன.

இதன்மூலம், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வரை அதிக ரயில்கள் இயக்க முடியும். இதுமட்டுமின்றி, தென்மாவட்டங்களில் இருந்து எழும்பூா் நோக்கி வரும் ரயில்களின் நிறுத்த நேரத்தை குறைக்கும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT