தமிழ்நாடு

விபத்தில் மாற்றுத்திறனாளியானவருக்கு ரூ.41.35 லட்சம் இழப்பீடு: தீா்ப்பாயம் உத்தரவு

DIN

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் மாற்றுத்திறனாளியானவருக்கு ரூ.41.35 லட்சத்தை தனியாா் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடாக வழங்க மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் தாலுகாவைச் சோ்ந்தவா் கே.செல்வகுமாா். இவா், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம், வேளச்சேரி பிரதான சாலையில், செம்பாக்கம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது அதிவேகமாக வந்த காா், செல்வகுமாரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா், மாற்றுத்திறனாளியானாா். இதனையடுத்து ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாயத்தில், செல்வகுமாா் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு விசாரணை, நீதிபதி வி.சுதா முன் நடைபெற்றது. விசாரணையில், மனுதாரருக்கு, 70 சதவீதம் நிரந்தர செயல்பாட்டு இயலாமை ஏற்பட்டுள்ளது. இதற்கு, காரை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, ரூ.41.35 லட்சத்தை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT