தமிழ்நாடு

தலைவாசலில் நகைக் கடையில் திருட்டு

11th Apr 2021 11:00 AM

ADVERTISEMENT


தலைவாசல் மும்முடியில் நகைக்கடையில்  7 கிலோ வெள்ளி பொருள்கள் உள்பட ரூ 4 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் மும்முடியில் ஆறுமுகம் மகன் முத்துராஜ்(34) என்பவர் ஆரா ஜீவல்லர்ஸ் என்ற கடையை நடத்தி வருகிறார். சனிக்கிழமை கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த வெள்ளி பொருள்கள் 7 கிலோ, ரொக்கம், கேமிரா, சிஸ்டம் என ரூ 4 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல்துணைக்கண்காணிப்பாளர் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT