தமிழ்நாடு

கொங்கணாபுரம் கால்நடைச் சந்தையில் விற்பனை சரிவு

DIN

எடப்பாடி:  எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் பிரசித்திபெற்ற கால்நடைச்சந்தையில், அண்மைகாலமாக கால்நடைகள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக, கால்நடைவியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மாநிலத்தின் முக்கிய கால்நடைச் சந்தைகளில் ஒன்றான, கொங்கணாபுரம் கால்நடைச்சந்தையில், குறிப்பிடும் படியான அளவில் நடைபெற்றுவந்த கால்நடைவணிகம், அண்மைகாலமாக வெகுவாக குறைந்துள்ளது. 

சேலம் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வாரசந்தையான, கொங்கணாபுரம் கால்நடைச் சந்தையில், கால்நடைகள் மற்றும் காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் விற்பானையாவது வழக்கம்,  மாநில அளவில் புகழ்பெற்ற இக்கால்நடை சந்தையானது, வாரந்தோறும் சனிக்கிழமை அன்று நடைபெறுற்று வருகிறது.  

இச்சந்தையில், அதிக எண்ணிக்கையில் ஆடு, மாடு மற்றும் கோழிகள், பந்தையபுறாக்கள், கறவைமாடுகள், உழவுப்பணிக்கான காளைமாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக இச்சந்தையில் அதிக எண்ணிக்கையில் சண்டை சேவல்கள் என பல்வேறு வகையான கால்நடைகள் விற்பனையாகி வருகின்றன.

மாநில நெடுஞ்சாலையினை ஒட்டி அமைந்துள்ள இச்சந்தைக்கு, தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடக மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநில வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்து  வளர்புக்கான கால்நடைகள் இறைச்சிக்கான கால்நடைகள் மற்றும் சண்டைசேவல்கள் உள்ளிட்ட கால்நடைகளை வாங்கிச்செல்கின்றனர். 

வாரந்தோறும் சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் துவங்கப்படும் இக்கால்நடை சந்தையில், சுமார் 4 கோடி ரூபாய் வரை பல்வேறு வகையான வர்த்தகங்கள் நடைபெற்று வந்த நிலையில், அண்மை காலமாக உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தாக்கத்தால், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகள், நோய்த்தொற்று குறித்த அச்சம், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத்தேர்தல் விதிமுறைகள், அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட பறவைக்காய்சல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், இச்சந்தைக்கு வரும் நுகர்வோர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து போனது. 

மேலும் உள்ளூர் பண்டிகைள் அதிகம் இல்லாத நிலையிலும், நோய்த்தொற்று அச்சத்தால் மாநிலம் முழுவதும் இறைச்சிக்கான தேவைகள் குறைந்துபோனதாலும், கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் வழக்கமாக நடைபெற்றுவந்த கால்நடை வணிகம், பாதியாக குறைந்துள்ளதாக இங்கு வரும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

வரும் நாள்களில் கரோனா தொற்றின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் நிலையில், புகழ்பெற்ற கொங்கணாபுரம் கால்நடைச்சந்தையில் நடைபெற்ற வரும் கால்நடைகளின் வணிகம் கேள்விக்குறியாகி விடும் எனவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளதாக, இச்சந்தைக்கு வரும் கால்நடைவியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT