தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாம்கள் திறப்பு: ராதாகிருஷ்ணன்

DIN


சென்னை: சென்னையில் கரோனா பாதித்தவர்களுக்காக மீண்டும் தனிமைப்படுத்தும் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருண்ணன், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 11 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதில், இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் பாதிப்பு அளவு 3 சதவீதம்தான்.  சென்னையில் 15 மண்டலங்களிலும் களப் பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கரோனா நோயாளிகள் அதிகரித்திருப்பதால், சென்னையில் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதைத்தவிர வேறு வழியில்லை சென்னை மற்றும் ராணிப்பேட்டையில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கரோன அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT