தமிழ்நாடு

கரோனாவில் இறந்தவர் உடலை மாற்றி அனுப்பியதால் உறவினர்கள் அதிர்ச்சி

DIN


கள்ளக்குறிச்சியில் கரோனாவில் இறந்தவர் உடலை மாற்றி அனுப்பிவைக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சந்தைப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த (50 வயது) நபருக்கு கரோனா பாதிக்கப்பட்டு, அண்மையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். அதே பெயரில் சின்னசேலம் அடுத்த தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் ஒரே பெயர் இருந்ததால், கரோனா பாதிப்பில் இறந்தவர் தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் என நினைத்து, மருத்துவமனை நிர்வாகம் அந்த சடலத்தை தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த உறவினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்துள்ளனர்.

இதில் குழப்பமடைந்த மருத்துவமனை நிர்வாகம், மீண்டும் சடலத்தை திருக்கோவிலூர் சந்தைப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த நபர்தான் இறந்தவர் என்பது உறுதி செய்து, பின்னர் சடலத்தை திருக்கோவிலூர் அனுப்பி வைத்துள்ளனர். ஒரே பெயரைக் கொண்ட 2 நபர்கள் கரோனா சிகிச்சை பெற்று வந்ததால், குழப்பம் ஏற்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT