தமிழ்நாடு

கம்பத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

29th Sep 2020 03:42 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டத்திலிருந்து கேரளா ஏலக்காய் தோட்டங்களுக்குத் தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி கம்பத்தில்  மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கரோனா ஊரடங்கால் கடந்த ஆறுமாதகாலமாக கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத் தோட்ட பணிகள் செய்யாமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

அதை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாகன ஒட்டுநர்கள் என 20, 000 பேர் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளனர். எனவே மக்களுக்கு குமுளி கம்பம் மெட்டு வழியாகச் செல்வதற்கு அனுமதித்திட தமிழக அரசும் கேரளா அரசும் இடுக்கி மாவட்ட நிர்வாகமும்  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதை  வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏரியா செயலாளர் ஜி. எம். நாகராஜன் தலைமை வகித்தார்.

ADVERTISEMENT

இதில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி அண்ணாமலை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பி.ஜெயராஜ்,  சி.ஐ.டி.யு. ஏரியா செயலாளர் பி. ஜெயன் எஸ். சின்னராஜ், வாகன ஒட்டுனர் சங்க தலைவர் கண்ணன், செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பிரபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT