தமிழ்நாடு

சீர்காழியில் பலத்த காற்றுடன் மழை: 50 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு

DIN

சீர்காழி வட்டத்தில் நேற்று இரவு 4 மணி நேரத்திற்கு மேல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை பலத்த மழையாகப் பெய்தது. 

காற்றுடன் பெய்த மழையால் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு ஆகிய பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

பல கிராமங்களில் பகலிலும் துண்டிக்கப்பட்ட மின்சாரம் வரவில்லை. சீர்காழியில் 64 மி.மீ மழையும், கொள்ளிடத்தில் 105 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழையால் பருத்தி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பா நேரடி விதைப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீடுகள், மின் கம்பிகள் மீது விழுந்த மரங்கள்  அகற்றும் பணி நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT