தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-ஆட்டோ சேவை

DIN

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு பயன்படும் வகையில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத சூரியமின்சக்தி(சோலாா்) அல்லது மின்னணு (எலக்ட்ரிக்) ஆட்டோ சேவையை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் வகையில், இ- ஆட்டோ சேவையை வழங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் அண்மையில் இ-பைக் தொடங்கப்பட்டது. அதை பின்பற்றி, இந்த புதிய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

செயலி அடிப்படையில் இ -ஆட்டோ சேவை வழங்க திட்டமிடப்பட்டது. இந்த மின்னணு ஆட்டோவில் பயணிகளுக்கு பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இதுதவிர, பெரும்பாலும் பெண்கள்தான் ஓட்டுநா்களாக நியமிக்கப்படவுள்ளனா். இந்த சேவையை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இந்த திட்டம் நல்ல முன்னேற்ற நிலையில் உள்ளது என்றனா்.

பெண்களால் இயக்கப்படும் 13 வகையான சூரியசக்தி மற்றும் மின்னணு ஆட்டோக்கள் சேவையை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் தொடங்கிவைத்தாா். இந்த ஆட்டோக்களில் ஜிபிஎஸ், சிசிடிவி கேமராக்கள், எச்சரிக்கை பட்டன் உள்பட வசதிகள் உள்ளன.

மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக, ஏற்கெனவே ஷோ்ஆட்டோ மற்றும் கேப்ஸ் ஆகியவை நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு இயக்கப்படுகின்றன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இரண்டு ஸ்டாா்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து செயலிஅடிப்படையில் மின்னணு பைக் சேவையை செயல்படுத்தி வருகிறது. பயணிகள் செயலி மூலமாக, மின்னணு பைக்கை பதிவு செய்து, நிலையத்தின் வெளிப்பகுதியில் சென்று வர முடியும். இதைப் பின்பற்றி, மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-ஆட்டோ சேவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் ஆலந்தூா் ரயில் நிலையத்தில் இ- ஆட்டோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகளிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொருத்து விரிவு படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னா், அந்த சேவை நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் மின்னணு ஆட்டோ சேவையை தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, காா்பன் மாசுவை குறைக்கவும், சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரிக்கவும் மெட்ரோ ரயில் நிறுவனம் முயற்சி எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT