தமிழ்நாடு

கொடைக்கானலில் அனைத்துக் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

28th Sep 2020 03:05 PM

ADVERTISEMENT

 

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கொடைக்கானலில் அனைத்து கட்சியினர் சார்பில் மூஞ்சிக்கல் பகுதியில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டமான விவசாயிகள்,சிறு வணிகர்களை பாதிக்கும், ஆன்லைன் மூலம் வர்த்தகத்தை திணிக்காதே, கார்பரேட் கம்பெனிக்கு துணைபோகாதே, பொது மக்களை தனியார் கம்பெனிகளுக்கு அடிமையாக்காதே,

நெல்லுக்கான குறைந்தபட்ச விலைக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும்,அரசு நெல் கொள்முதல் நிலையங்கள்,ரேசன் கடைகள் மூடுவதற்கும்  வழிவகுக்காதே, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தாதே என  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நகரச் செயலாளர் முகமது இப்ராஹிம், மாவட்ட காங்கிரஸ்கட்சித் தலைவர் அப்துல் கனிராஜா,மற்றும் கம்யூனி்ஸ்ட், மதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100−க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT