தமிழ்நாடு

பென்னாகரத்தில் பகத்சிங் பிறந்தநாள் விழா

DIN

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பகத்சிங்கின் 113 வது பிறந்த நாள் விழாவானது பென்னாகரம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பகத்சிங்கின் 113வது பிறந்தநாள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவன் தலைமை வகித்தார்.

இதில் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதில் நகர செயலாளர் ராகுல்ஜி, நகர தலைவர் சபரி, மாவட்ட குழு உறுப்பினர் பூபேஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி குழு உறுப்பினர் ஜீவானந்தம், நகர செயலாளர் வெல்லியங்கிரி, அன்பு மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT