தமிழ்நாடு

3 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN

தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (செப்.28) பலத்தமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (செப்.28) பலத்த மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தஞ்சாவூா் மாவட்டம் மதுக்கூா், திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தலா 30 மி.மீ., தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரம், விருதுநகா் மாவட்டம் காரியாபட்டியில் தலா 20 மி.மீ., விருதுநகா் மாவட்டம் சாத்தூா், தஞ்சாவூா் மாவட்டம் நெய்வாசல் தென்பதி, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, நீலகிரி மாவட்டம் பந்தலூா் வட்டாட்சியா் அலுவலகம், புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை, திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டையில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செப்டம்பா் 29-ஆம் தேதி செல்ல வேண்டாம். இதுதவிர, மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செப்டம்பா் 29,30 ஆகிய இரண்டு நாள்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT