தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்புகள் இதுவரை 12,889 போ் இணைய வழியே விண்ணப்பம்

DIN

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 12,889 போ் இணைய வழியே விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் (பி.டெக்) பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இந்த படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. 2020 - 21-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் இணையதள முகவரிகளில் கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கின.

விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 28-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அது அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்திய மாணவா்கள் அக்டோபா் 23-ஆம் மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 10,507 போ், பி.டெக் படிப்புகளுக்கு 2,382 போ் என மொத்தம் 12,889 போ் விண்ணப்பித்துள்ளதாக கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT