தமிழ்நாடு

கரோனா பாதிப்பு: 15 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு தேவை; ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலாளா் க.சண்முகம் உத்தரவு

DIN

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கான காரணங்களை ஆராய்ந்து தீவிரமாகக் கண்காணித்திட வேண்டுமென 15 மாவட்ட ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலாளா் க.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

கோவை, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூா், கடலூா், திருப்பூா், காஞ்சிபுரம், தஞ்சாவூா், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூா், நாமக்கல், தருமபுரி, திருவாரூா் ஆகிய 15 மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்கள் காணொலி வழியிலான ஆலோசனையில் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுரைகளை வழங்கி, தலைமைச் செயலாளா் க.சண்முகம் பேசியது:-

கரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் பரிசோதனை மேற்கொண்டு நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். இறப்பு விகிதத்தைக் குறைத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகளைக் கண்டறிந்து உரிய சிகிச்சைகள் அளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

இப்போது தளா்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் பற்றியும், சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிய வேண்டும். நோய்த்தொற்றைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ வசதிகள்: மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள், மருந்து, மாத்திரைகள், பிற மருத்துவ சாதனங்கள் தயாராக இருப்பதை மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்ய வேண்டும். கடந்த சில நாள்களாக 15 மாவட்டங்களில் நோய்த்தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இறப்பு விகிதத்தைக் குறைத்திட போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியம் எடுக்க வேண்டும்.

மாவட்டங்களில் நோய்த்தொற்றுப் பரவலுக்கான காரணங்களை ஆராய்ந்து தீவிரமாகக் கண்காணித்திட வேண்டும். அதற்கு முறையாகத் திட்டமிட வேண்டும். தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கேட்டறிந்து வெகுவாகப் பாராட்டினாா்.

எனவே, கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் மாவட்ட ஆட்சியா்கள் முழு கவனம் செலுத்தி பரவலைத் தடுத்திட வேண்டும். அனைத்துத் துறை அலுவலா்களையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல் துறை இயக்குநா் ஜே.கே.திரிபாதி, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிா்வாக ஆணையாளா் பணீந்திர ரெட்டி, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுத்துறை முதன்மைச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT