தமிழ்நாடு

வேளாண் மசோதா அவசர சட்டத்தை திரும்ப பெறக்கோரி விளை நிலத்தில் இறங்கி ம.ஜ.க ஆர்ப்பாட்டம்

27th Sep 2020 01:31 PM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மத்திய அரசின் வேளாண் மசோத அவசர சட்டத்தை திரும்ப பெறக்கோரி மனித நேய ஜனநாய கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) வயலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம், தோப்புத்துறை - தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் நிலக்கடலை சாகுபடி வயலில் இறங்கி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி தலைமை வகித்தார்.

வேளாண் மசோதா திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ஆர்ப்பட்டத்து பங்கேற்ற தமிமுன் அன்சாரி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  மத்திய அரசு வேளாண்மை சார்ந்து கொண்டு வந்துள்ள 3 சட்டத் திருத்தங்களும் விவசாயிகளுக்கு எதிரானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக ஏற்றுக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இந்த நிலைபாட்டை  தமிழக அதிமுக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் தமிமுன் அன்சாரி.

ADVERTISEMENT
ADVERTISEMENT