தமிழ்நாடு

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கரோனா

27th Sep 2020 11:09 AM

ADVERTISEMENT

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ், வியாழக்கிழமை சென்னையில் காங்கிரஸ் தலைவா்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அந்த சமயத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT