தமிழ்நாடு

ஜஸ்வந்த் சிங் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்

27th Sep 2020 11:57 AM

ADVERTISEMENT

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங்(82) காலமானார்.

உடல்நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்தார். 

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 

ADVERTISEMENT

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஜி இறந்ததைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு திறமையான நிர்வாகியாக இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அவர் கொண்டிருந்த நட்பை நாங்கள் அன்புடன் நினைவு கூர்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

Tags : ஜஸ்வந்த் சிங்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT