தமிழ்நாடு

சிறுமி பாலியல் வன்கொடுமை: சமூக வலைதளங்களில் பதிவிட்ட நண்பர்கள் கைது

27th Sep 2020 10:35 AM

ADVERTISEMENTகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட  நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் பயின்று வருகிறார்.

இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது, இத்தகைய நிலையில், அந்த சிறுவர்கள், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நண்பர்களான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உள்பட மூன்று சிறுவர்களை காவலர்கள் கைது செய்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT