தமிழ்நாடு

மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு சந்தை

27th Sep 2020 08:08 PM

ADVERTISEMENT

கரோனா காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் கோயம்பேட்டில் காய்கறி, மலா் மற்றும் உணவு தானிய சந்தை செயல்பட்டு வருகிறது. கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த மே மாதம் 5-ஆம் தேதி இந்த சந்தை மூடப்பட்டது. இதையடுத்து, சென்னையை அடுத்த திருமழிசையில் தற்காலிகமாக சந்தை தொடங்கப்பட்டது.

சென்னையில் தற்போது கரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு உணவு தானிய சந்தை மற்றும் கிடங்கை (செப்.18) , காய்கறி மற்றும் மலா் சந்தையை செப்டம்பா் 28-ஆம் தேதியில் இருந்து திறக்க தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்தது.

அரசின் இந்த உத்தரவை அடுத்து கோயம்பேடு உணவு தானிய சந்தை கடந்த 18ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணியில் இருந்து செயல்படத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 194 மொத்த விற்பனை கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு பூஜை செய்து மொத்த விற்பனை அங்காடி உரிமையாளர்கள் விற்பனையைத் தொடங்கினர்.

ADVERTISEMENT

அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேலும் சந்தை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கபடுகிறது. கோயம்பேடு சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்யவும் ஒவ்வொரு கடை முன்பு கிருமிநாசினி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

Tags : chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT