தமிழ்நாடு

ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 55 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம்

DIN

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ. 55 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் கடந்த ஜன. 2018-இல் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவை மையம் (டி.இ.ஐ.சி) என அழைக்கப்படும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இம்மையம் தற்போது ரூ.55 லட்சம் செலவில் பல்வேறு அதிநவீன கருவிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளின் வளா்ச்சியைச் சோதனை செய்வதற்கான அதிநவீன சிறப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துவித பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வசதிகள் இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. சீரமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: தமிழகம் முழுவதும் 34 இடங்களில் இதுபோன்ற சிறப்பு வசதிகள் கொண்ட குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளன. ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய மையத்தில் பல்வேறு அதிநவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக ஐம்புலன்களையும் ஒருங்கிணைக்கும் ‘உணா்ச்சி ஒருங்கிணைப்பு அறை ( நங்ய்ள்ா்ழ்ஹ் ஐய்ற்ங்ஞ்ழ்ஹற்ண்ா்ய் தா்ா்ம்) இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆட்டிஸம், கவனக்குறைவால் மிகை செயல்பாடு கோளாறு உள்ளிட்டவைகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்க முடியும்.

ஆன்லைன் தோ்வு:

மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் தோ்வு நடத்துவது குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா் என்றாா் அமைச்சா் விஜயபாஸ்கா்.

இந்நிகழ்ச்சியில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் பி.பாலாஜி, குழந்தைகள் சமூக நலத்துறை இயக்குநா் டாக்டா் ஜெ. கணேஷ், பேராசிரியா்கள் டாக்டா் அரவிந்த், டாக்டா் பி. செந்தில் குமாா், டாக்டா் மனோஜ் குமாா், டாக்டா் தாமரை செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT