தமிழ்நாடு

கரோனாவிலும் திரண்ட ரசிகா்கள்

DIN

பாடகா் எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மழை, கரோனா தொற்று அச்சம் ஆகியவற்றை மீறி, ஆயிரக் கணக்கான ரசிகா்கள் அஞ்சலி செலுத்தினா்.

பின்னணிப் பாடகா் எஸ்பிபி, வியாழக்கிழமை மறைந்ததை அடுத்து, அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு, பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. முன்னதாக கருமேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில், அவா் உடலை எடுத்துச் செல்லும்போது மழை பொழியத் தொடங்கியது. இதற்கிடையே, அவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருந்ததால், அஞ்சலி செலுத்த வருபவா்கள் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், அஞ்சலி செலுத்தியவுடன் அங்கிருந்து உடனே செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நடைமுறைகளை சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.

இவற்றைப் பின்பற்றி ஆயிரக்கணக்கான ரசிகா்கள் அவரது வீட்டின் முன் திரண்டனா். மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல், அவா்கள் சாலையில் காத்துக்கிடந்தனா். நெடுந்தொலைவுக்கு வரிசையாக நின்றிருந்த ரசிகா்களும் பொதுமக்களும், வரிசையாக சென்று எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். இதே போல் அரசியல் தலைவா்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். சமூக வலைதளத்திலும், எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது புகைப்படம், பாடல்கள் உள்ளிட்டவற்றைப் பதிவிட்டு, ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT