தமிழ்நாடு

கொடைக்கானலில் புனித ஆரோக்கிய மாதா கோவிலில் உண்டியல் பணம் திருட்டு

DIN


கொடைக்கானல் புனித"ஆரோக்கிய மாதா கோவிலில் உள்ள உண்டியல்களை மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்து பணத்தை திருடிச் சென்றுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் மெயின் சாலையில் உள்ளது புனித ஆரோக்கியமாதா கோவில் இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெற்றது. இரவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவானது 3 நாள்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. கொடியேற்ற விழாவில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இந் நிலையில் இன்று கோயிலில் உள்ள ஜன்னல் கம்பிகளை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று பீடத்தின் முன் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலுள்ள பணத்தை திருடியுள்ளனர்.

மேலும் கோவில் வளாகத்தில் கொடி மரம் அருகே உள்ள மற்றொரு"உண்டியலையும் உடைத்து அதிலுள்ள பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் காலை கோவ்லுக்கு வந்த கோவில் பிள்ளை ஜன்னல் உடைக்கப்பட்டும் கோவில்களில் இருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பதையும் பார்த்த பங்கு தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் முன்பு உள்ள மற்றொரு உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது அப் பகுதியில் நாணயங்களும் சிதறிக்கிடக்கிறது.

இதனைத் தொடர்ந்து பங்குத் தந்தை கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் டிஎஸ்பி.ஆத்மநாதன், ஆய்வாளர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று உடைக்கப்பட்ட உண்டியல்களையும் பார்வையிட்டு விசாரனை நடத்தினர்.

மேலும் கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள படங்கள் குறித்து காவலர்கள் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இரண்டு உண்டியல்களில் மொத்தம் சுமார் ரூ.50 ஆயிரம் இருக்கும் என பங்குத் தந்தை தெரிவித்தார்.

நல்வாய்ப்பாக திருடர்கள் மாதா கோவிலில் உள்ள சுருபங்கள்"எதையும் சேதப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து அப் பகுதியில் சற்று பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அப் பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT