தமிழ்நாடு

திருக்குவளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

DIN

திருக்குவளை கடைத்தெரு பகுதியில் தமிழ்நாடு அனைத்துவகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கீழையூர் ஒன்றிய செயலாளர் என். பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள அத்தியாவசிய பொருள்கள் திருத்த சட்டம்-2020, வேளாண் உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம்-2020,விளைவு வழி உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம்-2020 ஆகிய மூன்று அசுரர்களையும் உடனடியாகத் திரும்பப் பெறக் கோரியும், நீதிமன்ற ஆணைப்படி மாற்றுத் திறனாளிகளை உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட வேண்டும்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்பொழுது வழங்கிவரும் ரூபாய் 1000 என்ற உதவி தொகையை  மாதம் ரூபாய் 3000 ஆக உயர்த்தித் தர வேண்டியும், மேலும் கடுமையான ஊனத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூபாய் 5000 வழங்கிட வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. உடன் திருக்குவளை கிளைச் செயலாளர் திருமலைக்குமார், பொருளாளர் வேம்பு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT