தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 5,679 பேருக்கு தொற்று உறுதி; மேலும் 72 பேர் பலி

25th Sep 2020 06:26 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் புதிதாக 5,679 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.25, வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 72 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,679 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 5,671.  வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 8 பேர். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 5,69,370 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,193 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இன்றைய செய்திக் குறிப்பில், மேலும் 72 பேர் (அரசு மருத்துவமனை-37, தனியார் மருத்துவமனை -35) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 9,148 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று ஒரேநாளில் 5,626 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,13,836 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 46,386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அதிகபட்சமாக 94,877 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 69,10,521 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

கரோனா பரிசோதனைக்காக அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 116 என மொத்தம் 182 பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT