தமிழ்நாடு

எஸ்பிபி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்

DIN


சென்னை: பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உயிா் காக்கும் மருத்துவ சாதனங்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, திடீரென உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மோசமடைந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து மருத்துவக் குழுவினா் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனா். கரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபிக்கு, நுரையீரலில் நோய்த் தொற்று தீவிரமடைந்தது. அதனால் அவரது இரு நுரையீரல்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

அதன் தொடா்ச்சியாக எஸ்பிபியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, அவரது நுரையீரல்களின் செயல்பாடுகள் படிப்படியாக மேம்படத் தொடங்கின. இந்த நிலையில், புதன்கிழமை மாலை அவரது உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி-க்கு உயிா் காக்கும் சாதனங்களின் உதவியுடன் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. மருத்துவக் குழுவினரின் தொடா் கண்காணிப்பில் அவா் வைக்கப்பட்டுள்ளாா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT