தமிழ்நாடு

உசிலம்பட்டியில் விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் சாலை மறியல்

25th Sep 2020 11:47 AM

ADVERTISEMENT


வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டியில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட கூட்டணி கட்சியினரை காவலர்கள் கைது செய்தனர். 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டியில் விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் இ.கம்யூனிஸ்ட், மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்ட் பிளாக், மக்கள் அதிகாரம், விடுதலைச் சிறுத்தைகள், அகில இந்திய விவசாய சங்கம், மக்கள் அதிகாரம் கூட்டணி கட்சியினர் சாலை மறியல் செய்தனர். 

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிவி கதிரவன் தலைமையில் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் காளிதாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் மற்றும் கூட்டணிக் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவலர்கள் கைது செய்தனர். 

Tags : protest
ADVERTISEMENT
ADVERTISEMENT