தமிழ்நாடு

நாமக்கலில் வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

25th Sep 2020 02:49 PM

ADVERTISEMENT

 

நாமக்கல்: விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிப்புக்குள்ளாகும் மூன்று வேளாண் மசோதாக்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  

மாவட்ட  அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எருமப்பட்டி கடைவீதியில் பேருந்துகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நாமக்கல் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். 

மறியல் போராட்டத்தில் சதாசிவம், மாலா , ராமசாமி, சுப்பன், பூபாலன் கருப்பண்ணன், சிவச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

இதேபோல் மாவட்டம் முழுவதும் நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. எருமப்பட்டியில் ஒரு பெண் உட்பட 15 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

அவர்களை எரும்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் உள்ள ஜே.கே.பி திருமணமண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : protest
ADVERTISEMENT
ADVERTISEMENT